
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது. லாகூர் நகர் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் வழி மற்றும் அங்கிருந்து மீண்டும் ஹோட்டலுக்கு செல்லும் வழி போன்றவைகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு பணிகள் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில போலீசார் தங்களுடைய பணியை சிறப்பாக செய்யாததோடு பலர் வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பஞ்சாப் மாகாணம் நூறுக்கும் மேற்பட்ட போலீசாரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.