
தானே மாவட்டத்தில் 30 வயது உடைய நபர் ஒருவர் மது போதையில் மாலை 4;30 மணியளவில் பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 28 வயதுடைய பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அத்துடன் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண் தற்காப்புக்காக சமையல் கரண்டியை எடுத்து சரமாரியாக அவரை தாக்கியுள்ளார்.
இதில் அந்த நபருடைய அந்தரங்க உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில்
இருந்த மக்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு.. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.