
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள SK21 படத்தில் நடிக்க இருக்கிறார். சாய்பல்லவி நாயகியாக நடிக்க இருக்கும் இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், சாய் பல்லவி பற்றியும் அவரது அடுத்த திரைப்படமான SK21 குறித்தும் பகிர்ந்திருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சாய்பல்லவி ஒரு ஸ்டன்னிங் பெர்ஃபார்மர், அவர் என் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அவருடன் இணைந்து நடிக்கவும் அவரிடம் இருந்து பல் விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாக பகிர்ந்திருக்கிறார்.
#SK21 not going to have any dance sequences from #Sivakarthikeyan & #SaiPallavi – Something different is getting ready.. 💥#SK #Maaveeran #Ayalaan pic.twitter.com/glVbGlhytI
— VCD (@VCDtweets) March 31, 2023