கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விழா நடந்தது. அப்போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அரசு கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது உணவு சரியாக இல்லை, போதிய அளவு தண்ணீர் வருவதில்லை.

அடிப்படை வசதிகள் இல்லை என மாணவிகள் அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த அமைச்சர் விடுதி வார்டன் ஜான்சி ராணியை அழைத்து விளக்கம் கேட்டார். அதன் பிறகு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இது போன்ற புகார்கள் மீண்டும் வந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.