சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் தனது மகனிடம் விசாரித்தனர். அப்போது தமிழாசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவன் கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது மகனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவனுக்கு தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் மருத்துவனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். ஆசிரியர் தாக்கியது போன்று வழக்குபதிவு செய்து அவரைக் காப்பாற்றும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்து பிறப்புறுப்பு, ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். இதனால் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தமிழாசிரியர் சுதாகர் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.