திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை மேட்டு திடலில் ஒரு தொழிலதிபர் வசிக்கிறார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நாணயங்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறிது சிறிதாக நாணயங்கள் காணாமல் போனதாக சந்தேகம் வந்ததால் தொழிலதிபர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.