விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் (34)என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த மாணவியை திடீரென கார்த்திகேயன் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

பின்னர் அந்த மாணவிக்கு அவர் தாலி கட்ட முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தி கூச்சல் என்ற நிலையில் உடனடியாக அங்கு பொதுமக்கள் வந்து வாலிபரை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்துள்ளனர்.