ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தனது திடீர் வரவிலும், அதிரடி ஆட்டத்தாலும் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். ராகுல் திரிபாதிக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட இவர், மூன்றாவது நிலைக்கு களமிறங்கியதும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும், அதற்குப் பிறகு ஃபிளிக்கில் சிக்ஸும், பின்னர் புல் ஷாட்டில் இன்னொரு சிக்ஸும் அடித்து, மும்பை பந்துவீச்சாளர்களை வியக்கவைத்தார். மொத்தம் 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

 

அவரது தாக்குதலால் அஸ்வினி குமார் ஓவர் முழுவதும் அழுத்தம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆயுஷின் ஆட்டத்தை பார்த்த தோனியும் டிரெஸ்ஸிங் ரூமில் புன்னகையுடன் ரசித்ததை காண முடிந்தது. இளம் வீரரின் இந்த திடீர் எழுச்சி, சிஎஸ்கே ரசிகர்களிடம் மட்டும் இன்றி  இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராஜஸ்தான் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடிய நிலையில் தற்போது சென்னை அணிக்காக ஆயுஷ் சிறப்பாக விளையாடியுள்ளார். இவர்கள் எல்லாம் அடுத்து இந்திய அணியின் சிறந்த எதிர்காலமாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.