சமீப காலமாகவே பெரும்பாலும் இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காக பல்வேறு ஸ்டண்ட்டுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ரோட்டில் சிகரெட் குடித்தபடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ந் நிலையில் இதனை அந்த சிறுமியின் தந்தை பார்த்திருக்கிறார். இதனால் கோபமடைந்த தந்தை, சிறுமியை பெல்ட்டால் அடித்து வெளுத்தார். அப்போது, அடிக்காதீங்க அப்பா என்று சிறுமி கெஞ்சிய நிலையிலும் அவருடைய மனம் இறங்கவில்லை. இது எப்போது நடந்தது என தெரியவில்லை, தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.