
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோலார் என்ற பகுதி உள்ளது. இங்கு சிகரெட் பற்ற வைக்க மறுத்ததால் நண்பனை சக நண்பர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சங்கர் நாக், லட்சுமண் மற்றும் கணேஷ் ஆகியோர் மது குடிக்க ஒன்றாக டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அவர்கள் பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது சிகரெட் பற்ற வைக்க சங்கர் நாக் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த ஏற்பட்ட தகராறில் லக்ஷ்மன் மற்றும் கணேஷ் இருவரும் பீர் பாட்டிலால் சங்கர் தலையில் அடித்து அவரை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டதால் பைக்கில் இருந்த பெட்ரோல் ஊற்றி அவரை எரித்துவிட்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிந்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் பிடிப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்துள்ளனர்