உத்திரபிரதேச மாநிலத்தில் சதீஷ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய  மனைவிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 12ஆம் தேதி தன் மனைவியை அதே பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்குள்ள டாக்டர் தர்மேந்திர மாவி (42) சிகிச்சைக்காக சென்ற சதீஷின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். இது தொடர்பாக சதீஷிடம் அவருடைய மனைவி கூறிய நிலையில் அவர் தன்னுடைய மைத்துனர்கள் விவேக் மற்றும் விக்ரம் ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த டாக்டரிடம் சென்று தகராறு செய்தார்.

அவர்கள் மூவரும் சேர்ந்து டாக்டரை சரமாரியாக தாக்கிய நிலையில் பின்னர் கோபத்தில் சதீஷ் தான் வைத்திருந்த கத்தியால் டாக்டரின் பிறப்புறுப்பை அறுத்தார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவருடைய உடல் நலம் மிகவும் மோசமாக இருப்பதால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சதீஷ் உட்பட மூவரையும் கைது செய்துள்ளனர்.