உலகப்புகழ் பெற்ற ஃபாஸ்ட் ஃபுட் நிறுவமான கேஎப்சி (KFC), தங்கள் பிரமுக சிக்கன் சுவையை பல் துலக்கும் வகையில் ஒரு டூத்பேஸ்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அமெரிக்காவின் பிரபல டென்டல் பிராண்டான Hismile உடன் இணைந்து, ‘11 மசாலா சுவைகளுடன்’ கூடிய இந்த டூத்பேஸ்ட், வழக்கமான சுவையில்லாத டூத்பேஸ்ட்டுகளை மிகவும் வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அசாத்திய முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் இதை ஜோக் என்றே எண்ணினர். ஒருவர் எழுதியிருந்தார்: “Burger King இதே மாதிரி ஜோக் ஒருதரம் அடித்தது.” மற்றொருவர், “இது ஏப்ரல் ஃபூல்ஸ் ஜோக்கா?” என கேள்வியெழுப்பினார். ஒரு பயனர் மனவேதனையுடன், “நாங்க கேட்கும் வேட்ஜஸ், ஹாட் விங்ஸ் தான், டூத்பேஸ்டா?” என்று கூறியிருந்தார்.

இந்நூதன தயாரிப்பின் விலை அமெரிக்காவில் $13 ஆகும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,120. Hismile நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாகவே இது விற்பனை செய்யப்பட்டது. இதைப் பயன்படுத்தியவர்கள் சிலர் நகைச்சுவையுடன் விமர்சனங்களும் பகிர்ந்தனர். “சிக்கன் தோலை நக்குற மாதிரியா இருக்கும், எண்ணெய் வாசனையுடன் 11 மசாலா சுவை நேரடியாக வாய்க்குள் வரும்” என ஒருவரின் விமர்சனம் X வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் “விழித்தவுடனே வாயில் பிரைட் சிக்கன் சுவை வேண்டாம்” என நினைப்பவர்கள், இது உங்களுக்கு ஏற்றதல்ல” என்றும் அந்த விமர்சகர் சிரித்தபடியே கூறியிருந்தார்.

மேலும் சிக்கன் பிரியர்களுக்காக சிக்கன் டேஸ்ட்டில் டூத் பேஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.