
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அஸ்வின் என்ற 12 வயது சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றார். குடும்பத்தில் உள்ள மற்ற நான்கு பேரும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் தற்போது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.