
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வெளியாகும் நிலையில் அதில் சில வீடியோக்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்கிறது. அந்த வகையில் விலங்குகள் தொடர்பான பல வகையான வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்களை கவர்கிறது. இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற youtube பக்கத்தில் தற்போது சிங்கங்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றைக் கடந்து மறுபக்கத்திற்கு வருவது போன்று இருக்கிறது. இந்த வீடியோ கென்யாவில் உள்ள மசாய் மாறா தேசிய வனப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வனப்பகுதியில் ஒரு ஆறு உள்ளது. இங்குதான் 3 சிங்கங்கள் நீச்சல் அடித்து ஆற்றை கடந்துள்ளன. அவைகள் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு வரிசையாக வருகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.