
அமெரிக்காவில் உள்ள டென்னசி பகுதியில் லாரன் ஜோகன்சென்( வயது 22) எனும் நர்சிங் மாணவி வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது காதலன் பிரைசன் ரிவர்ஸ்( வயது 23) என்பவருடன் நாஷ்வில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிரைசன் ரிவர்ஸ் அவரது காதலியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினரிடம் கொடுக்கப்பட்ட புகாரின் படி, பிரைசஸ் ரிவர்ஸ் கைது செய்யப்பட்டார். பின்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், வெளியே வந்த நிலையில் 5 நாட்கள் கழித்து, அவரது முன்னாள் காதலியை கொலை செய்தார். அவரது உடல் நின்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்தது. அதோடு அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது என்றும், தலையில் சில துளைகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் தந்தை “நீதித்துறை எனது மகளையும், எனது குடும்பத்தையும் கைவிட்டது” என்று கூறியுள்ளார்.