
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகை தான் துஷாரா விஜயன். இவர் என்னுடைய 35 வயதில் நான் திரையுலகில் இருந்து வெளியேறி விடுவேன், அதன் பிறகு நடிக்க மாட்டேன்.
35 வயதிற்கு பிறகு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு 26 வயது ஆகும் நிலையில் இன்னும் 9 ஆண்டுகள் தான் இவர் நடிப்பார் என்பது அவரது இந்த பேச்சில் இருந்து தெரிகிறது. துஷாரா விஜயன் தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.