
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வரும் நிலையில், ஷூட்டிங் நிறைவடைந்த பிறகு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஏற்கனவே ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக செய்யப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது முழு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் அஜித் ஒரு வருடத்திற்கு ஓய்வெடுக்க இருக்கிறாராம். இதனால் அவர் ஒரு வருடத்திற்கு எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆக மாட்டார் என்று கூறப்படுகிறது.