தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில் அதற்கு அதிமுகவும் பாஜகவும் பதிலடிக் கொடுத்து வருகிறது. இந்த வகையில் பாஜக அதிமுக கூட்டணி பற்றி திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். அதாவது நேற்று திண்டுக்கல்லில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அவர் பேசியதாவது, இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் சினிமா படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போல அமித்ஷா முன்னிலையில் அதிமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக இந்த கூட்டணி திமுகவை டெபாசிட் இழக்க வைக்கும் என்றார். இந்நிலையில் நிருபர்கள் சைத்தான் கூட்டணியால் தான் நாங்கள் தோற்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் சைத்தான் கூட்டணியில் இணைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரசியல்வாதிகள் அப்படி மாற்றி மாற்றி தான் பேசுவோம். மேலும் பழசை எல்லாம் துடைத்துவிட விட வேண்டும் என்று கூறினார்.