பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. இன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவும் சிறப்பாக நடந்தது. பிரசாந்த் கிஷோர் இரண்டாம் ஆண்டு தொடக்கம் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசினார்.

அதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். இளம் தலைமுறையினரை எளிதாக ஏமாற்றி விட முடியாது. உரிய முடிவுகளை தேர்தல் உணர்த்தும் என கூறியுள்ளார்.