
நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஒரு பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபர் தாக்கி விழும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுமார் 41 வயதான நபர் ஒருவர் அங்குள்ள சில குழந்தைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, சம்பவ இடத்திற்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி, அருகில் சென்று என்ன பிரச்னை.? என்று கேட்டு சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த நபர் திடீரென பெண் போலீஸின் முகத்தில் ஓங்கி அடித்ததில் அவர் கீழே விழுந்தார். அவரது மூங்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. இந்த சம்பவம் ரோஸ்டேல் மற்றும் ரான்டல் சாலையில் நடந்துள்ளது.
அந்த நபரை கைது செய்ய போலீசார் முயன்றபோது, அவர் கடும் கூச்சலிட்டு தப்பிக்க முயற்சிக்கிறார். இதில் அவரது உடைகள் கழன்றன. தாக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் எர்ன்ஸ்ட் டெல்மா . அவர் மீது போலீஸ் அதிகாரியை தாக்கியது, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.