உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இந்த சிறுமி சில மாதங்களுக்கு முன்பு இயற்கை உபாதைக்காக இரவு நேரத்தில் காட்டுக்கு சென்றிருக்கிறார் அப்போது உள்ளூர் கவுன்சில் அரசு பள்ளியில் பியூனாக வேலை பார்த்து வரும் பங்கஜ் என்பவர் அமீத் என்ற நபரின் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியின் வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அப்போது அந்த சிறுமியிடம் நீ இதை வெளியே சொன்னால் நான் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனால் பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இது தொடர்ந்து அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருக்கிறாள் என தாய்க்கு தெரிய வந்தது. எனவே இந்த சிறுமிக்கு நடந்த கொடூரத்தை அறிந்த தாய் காவல் துறையில் புகார் கொடுத்தார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் பங்கஜ் மற்றும் அமீத் ஐ கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 13 வயது சிறுமியை பியூன் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.