சிம்ம ராசி அன்பர்களே,
இன்று சீரான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சிக்கல்கள் தீர்ந்து விடும். மனைவியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் போது கவனம் வேண்டும். இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ பாருங்கள்.
தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு குழப்பம் அடைய வேண்டாம். இந்த நாள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டால் வெற்றி பெற முடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். தொல்லை கொடுத்தவர்கள் தானாக விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
இன்று மாணவர்கள் யோசித்து சில முடிவுகளை எடுப்பது நல்லது. கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்