தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி செல்போன் சிம் கார்டுகளுக்கு தனிக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இணையத்திலும் இதுகுறித்த தகவல் வேகமாக பரவி வந்ததால் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த தகவலை TRAI மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “செல்போன் சிம் கார்டுகள் & பயன்படுத்தப்படாத எண்கள் இரண்டிற்கும் அபராதமோ அல்லது தனிக் கட்டணமோ விதிக்க திட்டமிடப்படவில்லை. இத்தகைய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த யூகங்கள் தொடர்பாக மக்கள் கவனம் செலுத்த வேண்டாம்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.