
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கோமதி பிரியா. இவர் பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதிப்பிரியா நடித்து வரும் நிலையில் அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சீரியலில் மிகவும் கோம்லியாக நடிக்கும் கோமதி பிரியா தற்போது மார்டன் லூக்கில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
