
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதை அடைவது என்பது ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களுக்கும் கனவாக உள்ளது. இந்த விருதானது வருடம்தோறும் சிறந்த படம் ,சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இந்த விழா நடைபெறுகிறது.
அந்தவகையில் 97வதுஆஸ்கர் விருது வழங்கும் விழாவானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் அதிகாலை 5.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை நகைச்சுவை நடிகர் கானன் ஓ ப்ரையன் தொகுத்து வழங்குகிறார். இதில் சிறந்த மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் பிரிவில் THE SUBSTANCE படம் ஆஸ்கர் விருதை வென்றது.