பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு நீண்ட கால சேமிப்பு திட்டம் மூலமாக பணத்தை சேமிக்க முடியும். அவர்களின் கல்வி மற்றும் திருமணம் தொடர்பான எதிர்கால நலனை கருதி சேமிப்பை இரட்டிப்பாக்க பல்வேறு திட்டங்களில் சேர பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக எல்ஐசி கன்யாடன் கொள்கையை செயல்படுத்தி வருகின்றது.

22 ஆண்டுகள் திட்டத்தில் மகள் பெயரில் பாலிசி எடுத்தவர்கள் 3600 ரூபாய் மாதம் தோறும் செலுத்த வேண்டும். இதில் 25 ஆண்டுகள் முடிந்த பிறகு 26 லட்சம் ரூபாய் பெறலாம். பாலிசி எடுத்த பிறகு தந்தை உயிரிழந்து விட்டால் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. பாலிசி முதிர்வு முடிந்ததும் அந்த தொகை மகளுக்கு வந்து சேரும்.