நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடித்த மாவீரன் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ட்விட்டரில் இருந்து கொஞ்ச காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில்,   “என் அன்பு சகோதர சகோதரிகளே, ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்; நான் விரைவில் திரும்பி வருவேன், பத்திரமாக இருங்கள்; என் படம் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.