டெல்லியில் சம்பவ நாளில் ராம் பால் என்பவர் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நடைமேடை அருகே தன்னுடைய பைக்கை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்த அவர் திடீரென கட்டையால் கொடூரமாக அவரை தாக்கினார். இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆரியன் என்பவர் தாக்குதல் நடத்தியது தெரியவந்த நிலையில் அவரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பூங்கா அருகே உள்ள ஒரு திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் ஒரு கடையில் வேலை பார்த்த ராம் பால் அதை தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கோபம் அடைந்த ஆரியன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by mid-day (@middayindia)