
கரூர் மாவட்டம் குளித்தலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேரை தொடர்ந்து, மேலும் 5 இளைஞர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
தாயை இழந்த அந்த சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், பள்ளி செல்லாமல் இருந்த சந்தர்ப்பத்தில் ஒரு இளைஞருடன் பழகியிருந்தார். பின்னர், அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி, ஜனவரி 27ஆம் தேதி குளித்தலை அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், முதலில் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சிறுமியிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், இந்தச் சம்பவத்தில் மேலும் 5 பேரும் தொடர்புடையவர்களாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கரண் (27), ரங்கநாதன் (22), சதீஷ் (20), பாலசந்தர் (20), பாலகிருஷ்ணன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.