
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தன் காத்திருப்பு கிராமத்தில் கல்யாணசுந்தரம்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தன்னை காட்டி கொடுத்து விடுவார் என்ற அச்சத்தில் மாணவியின் கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் 4000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.