தெலுங்கானா மாநிலத்தில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த சிறுமி தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரோடு இருந்த இளைஞர்கள் சிறுமியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி கஞ்சா குடிக்க வைத்திருக்கிறார்கள். பின்னர் அந்த ஐந்து இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறிய நிலையில் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.