உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள படோகி பகுதியில் ஆசிப் கான் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிறை தண்டனை பெற்ற நிலையில் 8 மாதங்கள் வரை சிறையில் இருந்தார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த மாதம் 5-ம் தேதி மீண்டும் அதே சிறுமியை கடத்திச் சென்றார்.

அந்த சிறுமிக்கு தற்போது 17 வயது ஆகிறது. அந்த சிறுமியை அவருடைய தந்தை பல்வேறு இடங்களில் தேடிய போதிலும் இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகிறார்கள். மேலும் சிறுமியை கற்பழித்த வழக்கில் சிறை சென்ற வாலிபர் ஜாமினில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.