தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்த நிலையில் இன்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளான். அந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழுந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவனின் கழுத்தில் இருந்த 12 கிராம் தங்கசெயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் இதனால் நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டானா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அப்போது அந்த சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது சிறுவனின் வாய் மற்றும் ஆசன வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவனின் சடலம் தற்போது தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத  பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.