இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமாக மற்றும் பணம் சம்பாதிக்க பலர் தவறான பாதைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதனை படம்பிடித்து பணம் சம்பாதித்ததாக youtuber திவ்யா, சித்ரா, கார்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நால்வரையும் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யூடியூபில் கார்த்திக் மாமா என்ற தலைப்பில் கள்ளச்சி திவ்யா என்பவர் பிரபலமாக இருந்தார். இவர்தான் சிறுவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.