
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு தனிநபர் மற்றும் சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வட்டி விகிதம் 1.25 லட்சம் ரூபாய்க்கு 7 முதல் 8 சதவீதம் வழங்கப்படுகின்றது.
சுய உதவி குழுக்களுக்கும் இதில் கடன் உதவி வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மேலும் கழகத்தின் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.