
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் லாரன்ஸ் பிஷ்னோய் (38). இவர் தன் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்த நிலையில் 12-ம் வகுப்பு வரை முடித்துள்ளார். பின்னர் சண்டிகர் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அப்போது முதலே கல்லூரி அளவில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்த அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவானது. பின்னர் கொலை வழக்குகள் பதிவான நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் பாடகர் சித்து மூஸ்வாலா உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் கொலைக்கு காரணமானவர். சமீபத்தில் பாபா சித்திக் படுகொலை சம்பவத்திற்கு அந்த கும்பல் பொறுப்பேற்றுள்ளது. சிறையில் இருந்து கொண்டே லாரன்ஸ் பிஷ்னோய் கொலைக்கு திட்டம் திட்டுவது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இந்தியாவில் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உட்பட 11 மாவட்டங்களில் துப்பாக்கி பயிற்சி பெற்ற 700 நபர்களை தன்வசம் வைத்துக்கொண்டு மிகப்பெரிய தாதா கும்பலாக இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு யார் உதவி செய்தாலும் அவருக்கு நெருக்கமாக இருந்தாலும் பாபா சித்திக் நிலைமைதான் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு லாரன்ஸ் மீது முதல் வழக்கு பதிவான நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தல் பிறகுதான் அவர் வெளி உலகிற்கு பரவலாக தெரிய ஆரம்பித்தார்.
அதாவது ராஜஸ்தான் மாநிலத்திற்கு படப்பிடிப்புக்காக சென்ற சல்மான் கான் கடந்த 1998 ஆம் ஆண்டு அந்த மாநிலங்களில் கடவுளாக வழங்கப்படும் கரும்புலி மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளார். இதிலிருந்து தான் சல்மான் கானுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். பிஷ்னோய் சமுதாயத்தினர் புனித மற்றும் கடவுளாக வணங்கும் மானை சல்மான் கான் வேட்டையாடி சாப்பிட்டது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் கூட சல்மான் கான் வீட்டில் மீது துப்பாக்கி சூடு நடந்தது. மேலும் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட பிறகு தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.