
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அங்குர் படியா (43) என்பவர் கைதுசெய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு அங்குர் பாடியாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அவர் ராஜஸ்தான் ஜகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
அந்த வழக்கை பற்றி விசாரித்த நீதிபதிகள் கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கு மரண தண்டனையிருந்து விலக்கு அளித்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து இவர் சங்கானேர் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினருக்கு நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.