
இந்தியாவில் தற்போது அதிக அளவிலான மக்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படுவதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். வாயு கசிவுகள் மற்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சில நேரங்களில் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் விபத்துக்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அதனை பயன்படுத்தும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சமையல் சிலிண்டரில் கேஸ் கசிந்தே தீப்பிடித்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்படும். சமையல் சிலிண்டரில் கேஸ் கசிந்து வெடித்தால் பெரிய இழப்பு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக இலவச உதவி எண்கள் நடைமுறையில் உள்ளது. 1800-2333-555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் அது பதிவு செய்யப்பட்டு கசிவை சரி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். 24 மணி நேர உதவி எண் 1906 தொடர்பு கொண்ட புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.