சமையல் எரிவாயு இணைப்புகளை பராமரிப்பதற்கு பயோமெட்ரிக் சரி பார்ப்பை கட்டாயமாக அரசு தற்போது முடிவு செய்துள்ளது. முன்னதாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மட்டுமே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இருந்தாலும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், எரிவாயு இணைப்புகள் உள்ள அனைவருக்கும் பயோமெட்ரிக் சரிபார்ப்பை கட்டாயமாக்கியது. முடிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படாத நிலையில் மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள தவறினால் சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம். இந்தியா, பாரத் மற்றும் எச்பி போன்ற பொதுத்துறை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் சரி பார்ப்பை முடிக்க வேண்டும். சிலிண்டர் இணைப்பை மாற்ற தனி நபர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு புத்தகம் ஆகியவற்றுடன் ஏஜென்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது