சிலிண்டர் பயனர்களின் உண்மை நிலையை அறிய கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் பயனாளர்கள் பலர் இன்னும் கேஒய்சி அப்டேட் செய்யவில்லை என்று கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது வழங்கப்படும் ரசீதில் கேஒய்சி நிலுவையில் உள்ளது என்ற முத்திரையை ஏஜென்சிகள் பதிவு செய்து அனுப்புகின்றன. எனவே இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு நேரில் சென்று கேஒய்சி பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் அட்டை மற்றும் சிலிண்டர் புக்கிங் ரசீதை பயனாளர்கள் எடுத்துச் சென்றால் உடனடியாக கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு கே ஒய் சி அப்டேட் செய்யப்படும் என கேஸ் ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.