
நாட்டில் கிராமப்புறங்களில் முதல் நகர்ப்புறங்கள் வரை பெரும்பாலானவர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். வீடுகள் தோறும் கேஸ் சிலிண்டரை ஊழியர்கள் விநியோகம் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது கேஸ் சிலிண்டர் வாங்கும் போது அதனை சரியான முறையில் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக வாஷர் மற்றும் வால்வு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கான கருவிகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் வாஷர் மற்றும் வால்வு சரியாக இல்லாத பட்சத்தில் அது தொடர்பாக உடனடியாக ஊழியர்களிடம் கூறலாம் என்றும் அவர்கள் சரி பார்த்து கொடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அதனை உடனடியாக மாற்றி வேறு புதிய சிலிண்டர் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஊழியர்கள் சிலிண்டர் மாற்றி தர முடியாது என்று கூறினால் சிலிண்டர் வாங்கும் ரசீதில் உள்ள போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சிலிண்டர் கொடுக்கும்போது ஊழியர்கள் இந்த சோதனைகளை சரிவர செய்யவில்லை எனில் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.