
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தில் சில இடங்களில் உள்ள பட்டாசு ஆலையில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வேம்பு என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.