தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோன்று சுதா கொங்காரா இயக்கத்தில் SK25 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் ரவி மோகன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பெயர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி SK25 படத்திற்கு பராசக்தி என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை உறுதி செய்வதற்கான டீசர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.