கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்களை நாம் பார்த்திருப்போம். இங்கு சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் 27 வயதான கோல்டி ரைக்வார் என்ற பெண் சிவபெருமானை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணத்தில் சிவபெருமானின் வெள்ளை திருவுருவ சிலைக்கு அலங்காரம் செய்து தேரில் வைத்து ஊர்வலம் ஏற்றி வரப்பட்டது.

இந்த திருமணம் படகான் கேட் வெளியில் அமைந்துள்ள பிரம்மகுமாரி என்ற ஆசிரமத்தில் நடந்தது. அந்தப் பெண் ஆன்மீக கல்வியை முடித்துவிட்டு பாராகானில் உள்ள பிரஜா பிதா பிரம்ம குமாரி ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயாவில் கடவுளுக்கு சேவைகள் செய்து வருகின்றார். அப்போது சிவபெருமானை திருமணம் செய்து கணவனாக ஏற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். சிறுவயதில் இருந்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு துணைவியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் சிவபெருமான் என்னை துணையாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி எனவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.