மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியிலுள்ள ஒரு சில தெருக்களில் மக்கள் தாங்கள் வீடுகளுக்கு வெளியே கதவுகள் அல்லது ஜன்னல்களில் சிவப்பு பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர். அதை பார்த்த சில மக்கள் இது எதற்கு என்று தெரியாமல் குழம்பி உள்ளனர். மேலும் சிலர் இவர்கள் சூனியத்தில் ஈடுபடுவதாக நினைத்து கொண்டிருக்கிறனர். இதை தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் இது எதற்காக என்று விசாரித்தபோது அவர்கள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்ததால் இவ்வாறு செய்ததாக கூறியதுடன் நாங்கள் முன்னெச்சரிக்கையாக இந்த முறையை கையாண்டு வருவதக்கவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிவப்பு நிறம் நாய்களின் கண்களை எரிச்சலூட்டும் என்பதால் நாங்கள் பாட்டிலில் சிவப்பு நிற தண்ணீரை நிரப்பி கதவு முன்பு தொங்கவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் நாய்கள் நீளம், பச்சை மற்றும் சிவப்பு நிறத்தை வேறுபடுத்தி பார்க்கப் போராடுவதாகவும் இதனால் தான் காட்டு நாய்கள் அதிகாலையில் வெளியே வருவதில்லை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுறுசுறுப்பாக இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தெரு நாய்களின் பிரச்சனை சாகர் மாவட்டம் முழுவதும் இருப்பதால் தினமும் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தெருநாய் ஒன்று அம்மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவனை கடித்ததால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அங்கு 2 1/2 மணி நேரத்தில் தெருநாய் ஒன்று 17 பேரை கடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சுவதால் இந்த சிவப்பு பாட்டலை தாங்கள் வீடுகளுக்கு வெளியே தொங்கவிடுவது உட்பட பல்வேறு வழிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.