ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் சென்னை அணி வீரர் தோனி 8வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசியது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த போதிலும் அணியால் வெல்ல முடியவில்லை.

இது குறித்து பேசிய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. தோனி நன்றாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார், அணி வென்றாலும் தோற்றாலும் யார் கவலைப்படுகிறார்கள்? என்றார்.