அமெரிக்காவில் ஹூஸ்டனில் இருந்து சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டது. அப்போது ஒரு இளம்பெண் திடீரென தன்னை இறக்கி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் விமானம் கிளம்பி விட்டதால் இறக்கி விட முடியாது என விமான ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பெண் திடீரென தனது ஆடைகளை கழற்றி சத்தம் போட ஆரம்பித்தார். விமான பணிப்பெண்கள் அவரை தடுத்து நிறுத்தியிள்ளனர்.

ஆனால் எதையும் கேட்காமல் அந்த பெண் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார். ஒரு கட்டத்தில் விமான காக்பிட் கதவையும் அந்த பெண் வேகமாக தட்டியுள்ளார். விமானத்தில் குழந்தைகளும் இருந்ததால் பெண்ணின் செயல் மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. இதனால் பைலட் விமானத்தை மீண்டும் விமான நிலைய கேட்டிற்கு திருப்பி விட்டார். விமானம் தரையரங்கியதும் போலீசார் இளம்பெண்ணை கைது செய்தனர். அதன் பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது.