கூட்டணி கட்சிகளிடம் சீட் வாங்குவதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்துகிறது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் திமுக கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய போது, கட்சிக்காக உழைக்கணும் மக்களுக்கு நல்லது செய்யனும் என்பதற்காக கட்சி நடத்தவில்லை. தேர்தல் வந்தால் தான் காங்கிரஸ் கட்சியினர் எட்டியே பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.