
சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 வீடுகளும் 1345 சாலைகளும் சேதமடைந்துள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை காடாக காட்சியளிக்கும் நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.