
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் மண்ணிற்குள் புதைந்தனர். இவர்களை மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு மேலும் 24 பேரை காணவில்லை என்றும் தொடர்ந்து மீட்பு குழுவினர் தேடி வருவதாகவும் பேரிடர் நிவாரண தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.